Tuesday, March 9, 2010

தேங்காய் சட்னி-1

தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் - அரை கப்
பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - 1இன்ச் துண்டு
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை -சிறிது
உப்பு
தாளிக்க
தேங்காயெண்ணெய் -1ஸ்பூன்
கடுகு -1/2ஸ்பூன்
உளுந்துப் பருப்பு - 1/2ஸ்பூன்
கறிவேப்பிலை - 4இலைகள்

செய்முறை
தேங்காய் முதல் உப்பு வரையுள்ள பொருட்களை கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும்.

எண்ணெய் காய வைத்து தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்துக் கொட்டவும்.

சுவையான தேங்காய் சட்னி தயார்..இது இட்லி,தோசை,சுடுசாதம் இவற்றுக்கு நன்றாக இருக்கும்.

5 comments:

  1. பொங்கல் , வடை, பஜ்ஜி இதை எல்லாம் விட்டுடீங்க மஹி .... எல்லாத்துக்கும் நல்லா இருக்கும் இல்ல

    ReplyDelete
  2. மகளிர் தின வாழ்த்துக்கள் சாரு!
    எங்க வீட்டுல பொங்கல்,வடை எல்லாம் இவருக்கு அவ்வளவா புடிக்காது..ஸோ,நான் அதெல்லாம் செய்யறதே இல்ல..அதான் ஞாபகம் வராம விட்டுட்டேன். :)

    ReplyDelete
  3. I am reading your blog for the last 3 years. All are very nice. Please continue

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அழகு லக்‌ஷ்மி! முடிந்தவரை ப்ளாகை அப்டேட் செய்துட்டேதான் இருக்கேன். :)

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails