Tuesday, March 23, 2010

சேனை கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்
சேனைகிழங்கு - 350கிராம்
அரைக்க
தேங்காய் - கால் மூடி
பூண்டு -3பல்
பட்டை,பிரிஞ்சி இலை - சிறிது
கிராம்பு - 2 (சிறியது)
சோம்பு - 1/2 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
தனியா - 1ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் -2ஸ்பூன்
கடுகு -1/2ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
சர்க்கரை -1/2ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை - சிறிது

செய்முறை
சேனைக் கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கி குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை
கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மைய அரைத்துவைக்கவும்.
எண்ணெய் காயவைத்து கடுகு,சீரகம்,கறிவேப்பிலை தாளித்து அரைத்த மசாலாவை சேர்த்து மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் சர்க்கரை சேர்த்து வேக வைத்த கிழங்கையும் சேர்த்து பிரட்டிவிடவும்.
மிதமான சூட்டில் மசாலாவின் தண்ணீர் சுண்டும்வரை கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான சேனைக் கிழங்கு வறுவல் ரெடி.

9 comments:

  1. மகி நீங்க வெஜ் கேட்டீங்களென்னு சேனைக்கிழங்கு வாங்கி ரோஸ்ட்(சாப்ஸ்) செய்து போடலாம்னு இருந்தேன்,முந்திக்கொண்டீர்கள்,என்னோடது கொஞ்சம் மாறுபடும்.அருமையாக இருக்கு.

    ReplyDelete
  2. ஆஹா.. மஹி.. பழசெல்லாம் ஞாபகம் வருது :) அப்படியே இதோட ஆங்கிலப் பெயரையும் போட்டீங்கன்னா நல்லாயிருக்கும் :)

    ReplyDelete
  3. பாக்கவே அழகாயிருக்கு :)ருசி பத்தி சொல்லத் தேவையில்ல :)

    ReplyDelete
  4. ஹை..சேனைக்கிழங்கு வறுவலா...நல்லா இருக்கே இந்த முறை புதுசா இருக்கு மஹி இதுவரை சேனக்கிழங்கை வறுத்துதான் சாப்பிட்டு இருக்கேன்...ஆனால் என் அம்மா இன்னொரு முறையில் செய்வாங்க அது எப்படின்னு தெரியாது ஆனால் நல்லா இருக்கும்.மஹி இந்த முறையிலும் செய்து பார்க்கிரேன்.மஹி இதையெல்லாம் என்னைக்குதான் செய்து பார்ப்பதுனு தெரிலை...நீங்க மேலும் மேலும் போட்டுகிட்டே போறீங்க....லண்டன் வந்து ஒரு முறை கூட சேனக்கிழங்கே வாங்கினதில்லை..நன்றி மஹி.

    ReplyDelete
  5. ஆஹா.. மஹி.. பழசெல்லாம் ஞாபகம் வருது :) // எனக்கும்..:) ரெசிப்பி டைப் பண்ணறப்போ நினைச்சிட்டே இருந்தேன். நீ தான் ரிசர்ச்சே பண்ணி எலிபன்ட் யாம்-ஐ சேப்பங்கிழங்குன்னு கண்க்ளூட் பண்ணிருந்தியே..அதே தான் இது! ... Elephant Yam in English/ Suran in Hindhi
    .
    ஆசியாக்கா, சீக்கிரம் உங்க ரெசிப்பியும் குடுங்க..சமைச்சுப் பாத்துடலாம்.

    கவுண்டருக்கு..நன்றிங்க!

    கொய்னி,இந்தியாக்கு பக்கத்துலதான:) இருக்கீங்க?உங்களுக்கு பிரெஷ் சேனைக் கிழங்கே கிடைக்கலாம்..செஞ்சு பாருங்க,நன்றி!

    ReplyDelete
  6. ஆகா ஆகா அன்பின் மகி - சேனைக் கிழங்கு வறுவல் எப்படிச் செய்வது என்பதனை நல்ல விளக்கத்துடன் படங்களுடன் பதிவாக இட்டது நன்று. ஆமா அரிக்காதா ? இங்க மதுரைல சேனைக் கிழங்கு வாங்கி சமைச்சா அரிக்குமே - அதனால வாஙறதே இல்லை. நல்வாழ்த்துகள் மகி - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. அன்பின் சீனா ஐயா, வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் எனது நன்றிகள்! பல்வேறு காரணங்களால் உங்களுக்கு உடனடியாக பதிலளிக்க இயலவில்லை



    //ஆமா அரிக்காதா ?// :) சேனையில் இரு வகை உண்டுங்க, நல்ல இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் காய் அரிக்காதுங்க . வெள்ளை நிற சேனை அரிக்கும். இந்த பதிவைப் பாருங்க.



    http://mahikitchen.blogspot.in/2010/10/blog-post_26.html


    //இங்க மதுரைல சேனைக் கிழங்கு வாங்கி சமைச்சா அரிக்குமே// அது வெள்ளை சேனைக் கிழங்கா இருக்கும்ங்க.. :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails