Wednesday, December 7, 2011

மினி மீல்மேக்கர் வறுவல்

இந்த முறை ஊருக்குப் போயிருந்த பொழுது, கிச்சன்ல இருந்த மளிகை சாமான்களில் ஒரு பாக்கெட் என் கவனத்தைக் கவர்ந்தது. குட்டிகுட்டி உருண்டைகளா ப்ரவுன் கலரில் இருந்தது என்னன்னு என்னால யூகிக்க முடியல..அது என்னன்னு தெரிஞ்சதும் ஒரே ஆச்சரியமாப் போச்சு போங்க. மீல் மேக்கர்/சோயா சங்க்ஸ்/சோயா மீல் உருண்டைகள்தானாம் அது!

பாருங்களேன், நார்மல் சைஸ்ல இருக்க மீல் மேக்கருக்கும் மினிமீல் மேக்கருக்குக்கும் எவ்ளோ வித்யாசம்னு! க்யூட்டா இருக்கில்ல? :) இந்த வறுவல்ல அப்பளத்தை நொறுக்கிப் போட்டு, தக்காளி-வெங்காயம் போட்டு, லெமன் ஜூஸும் புழிஞ்சு சாப்ட்டா...சூஊஊஊப்பரா இருந்தது.

தேவையான பொருட்கள்
மினி மீல் மேக்கர்-1/2கப்
வெங்காயம்(மீடியம்சைஸ்)-1
பச்சைமிளகாய்-1
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
புதினா,மல்லி இலை-கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
அரைத்துக்கொள்ள
தேங்காய்-1/4கப்
ஏலக்காய்-1
பட்டை-2"துண்டு
கிராம்பு-1
சோம்பு-1டீஸ்பூன்
பிரியாணி இலை-1
வரமிளகாய்-5

செய்முறை
பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவிட்டு மீல்மேக்கர் உருண்டைகளைப் போட்டு 3 நிமிடங்களில் எடுத்து தண்ணீரை வடித்து, குளிர் நீரில் அலசி வைக்கவும்.

வெங்காயம்,பச்சைமிளகாய்,மல்லி-புதினாவை பொடியாக நறுக்கிவைக்கவும்.

அரைக்கக் கொடுத்தவற்றை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவிட்டு, வெங்காயம்-மிளகாய்,புதினா,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் மினி மீல் மேக்கரை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

அரைத்த மசாலாவை ஊற்றி அரை கப் தண்ணீர்,தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

மசாலாவில் தண்ணீர் வற்றியதும் அடுப்பை ஸிம்மில் வைத்து வறுவல் ட்ரையாக வரும் வரை அடிபிடிக்காமல் கிளறி, மல்லித்தழை தூவி இறக்கவும்.

சுவையான மீல் மேக்கர் ஃப்ரை ரெடி. சாதம்,சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். அல்லது நாங்க சாப்பிட்டது போலவும் சாப்பிட்டுப் பாருங்க,சூப்பரா இருக்கும்!

மினி மீல் மேக்கர் இல்லைன்னா பெரிய சோயா உருண்டையிலும் செய்யலாம்..நான் எப்பவுமே அதில்தான் செய்வது..இந்தமுறை செய்தபொழுது எடுத்த படத்தை விட பழைய படம் நல்லா இருக்கு...நீங்க என்ன சொல்றீங்க?? :)

குறிப்பு
பெரிய மீல் மேக்கரை நீரில்லாமல் பிழிந்துவிட்டுத்தான் சமைப்பது வழக்கம், மினி மீல் மேக்கரை தண்ணீரில் கொதிக்கவிட்டு எடுத்தபோது அழகழகா முத்துப்போல:) இருந்தது. தண்ணீரைப் பிழிந்ததும் பரிதாபமா ஷேப்லெஸ்-ஆப் போனது! :-| அதனால் அப்படியே சேர்த்து செய்தேன், ருசியில் பெரியவித்யாசம் தெரியவில்லை.இருந்தாலும் பிழிந்துவிட்டு செய்யச்சொல்லி நட்பூக்கள் எல்லாரும் சொல்றாங்க..அடுத்த முறை பிழிஞ்சுருவோம்! :)

14 comments:

  1. எங்கோ ஒரு இடத்தில மீள் மக்கர் சாப்ப்டிட்டு விட்டு
    சிக்கென் ரொம்ப சொப்ட்ட இருக்கு என்று சொன்னதாக நியாபகம்

    ReplyDelete
  2. அம்மா(மாமியார்)// அட இப்படியும் ஒரு மருமகளா...
    (BABY ATHIRA NOTED....)
    im im..வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. அம்மா(மாமியார்)// அட இப்படியும் ஒரு மருமகளா..
    கொடுத்து வச்ச மாமியார்.
    மினி மீல் மேக்கர் ஃப்ரை சூப்பர்.கொஞ்சநாள் மீல்மேக்கர் நினைவே வரலை.கிச்சனில் இருக்கான்னு பார்க்கணும்.

    ReplyDelete
  4. ஆஹா புதுமையான மீல் மேக்கர் ஃப்ரை சூப்பர்... மேலே நொருக்கிய அப்பளம் , எலுமிச்சை சாறு கலவையே சூப்பர்... இப்பவே செய்து சாப்பிடனும் போல் இருக்கு மகி

    ReplyDelete
  5. அருமையான மீல்மேக்கர் வறுவலை செய்து காட்டி இருக்கீங்க மகி.

    குளிர் நீரில் அலசி வைக்கவும். (மீல் மேக்கரைப் பிழியவேணாம், பொடியாக இருப்பதால் பிழியும்போது ஷேப் இல்லாமல் போய்விடும்.)
    //

    இல்லை .மகி.ஷேப் போய்டும் என்பதற்காக வேகவைத்த மீல் மேக்கரை பிழியாமல் உபயோகித்தால் அதன் சுவையே போய் விடும்.மீல்மேக்கரினுள் நீர் கோர்த்துக்கொண்டு வத வத வென்றாகி டேஸ்டே மாறிவிடும்.அரை குறையாக பிழிந்தால் கூட டேஸ்ட் கிடைக்காது.ஷேப்பை பார்க்காமல் ஒரு முறை ஒட்ட,இறுக பிழிந்து விட்டு உபயோகித்துப்பாருங்கள்.அப்புறம் மீல் மேக்கரைப்பார்க்கும் பொழுதெல்லாம் ஸாதிகா அக்காவை மறக்க மாட்டீர்கள்.

    ReplyDelete
  6. மினி மீல் மேக்கர் மைக்ரோ இட்லிஸ் மாதிரியே குட்டி குட்டியா இங்கேயும் கிடைக்குது மகி ,சாதிகா சொன்னது சரியே தண்ணி ஊறினா டேஸ்ட் நல்லாருக்காது .அப்பளதொடு ட்ரை பண்றேன் .

    ReplyDelete
  7. அடடா இதுவோ அது?:))).

    சோயா உருண்டைகள் பல வடிவங்களில் கிடைக்குதே மகி. இப்பொழுது ரவ்வைபோலவும் கிடைக்குது, நான் வாங்கி வந்து சுண்டல் செய்தேன், கறி செய்தேன் நன்றாக இருந்தது.

    ஏன் இன்னும் சிவாவைக் காணவில்லை?:)).. மீ எஸ்ஸ்:)).

    ஸாதிகா அக்கா சொன்னதுபோல பிழியோணும் மகி, இல்லாவிட்டால் சுவை ஒருமாதிரி இருக்கும். நல்லா முறுகப் பொரித்து, அதனோடு வெங்காயமும் செத்தல் மிளகாயும் பொரித்து கிளறிவிட்டால் சூஊஊஊஊப்ப்ப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  8. அம்மா(மாமியார்)// அட இப்படியும் ஒரு மருமகளா...
    (BABY ATHIRA NOTED....)//

    poos what happened to your sharp eye sight .ROFL:))).:))).

    ReplyDelete
  9. மகி, அதீஸ் சொன்னது போல பல ஷேப்புகளிலும் கிடைக்கும். இலங்கை தயாரிப்புகளில் உள்ளே ஒரு மசாலாவும் சேர்த்தே இருக்கும். என் வீட்டுக் காரருக்கு இது ஏனோ பிடிப்பதில்லை அதனால் நான் சமைப்பது குறைவு. தண்ணீரைப் பிழிந்தால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும்.

    ReplyDelete
  10. ரொம்பவும் நன்றாக இருக்கும் போல இருக்கே. மருமகள் கிச்சனில் இருக்கா என்று பார்த்தேன்.இருக்கு. ஒருநாள் நானே பண்ணுகிறேன் என்றாள். இன்னும் ஸந்தோஷம். மைக்ரோவேவில் சுட்ட அப்பளாம்,லெமன்,வெங்காயம் எல்லாம்
    போட்டு அப்பளாம் அழகாக வந்திருக்கு. சோயா உடம்பிற்கு மிகவும் நல்லது. ஹெல்தியான குறிப்பு.

    ReplyDelete
  11. நாளைக்கு எங்க வீட்டில் மீல்மேக்கர் வறுவல் தான். வீட்டில் எப்படி பண்ண போறாங்களோ !?
    பகிர்விற்கு நன்றி சகோதரி!
    இதையும் படிக்கலாமே :
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

    ReplyDelete
  12. சிவா,இப்பலாம் அடிக்கடி பர்ஸ்ட்டாவே வந்துடறீங்க!குட்!:)

    /மீள் மக்கர்/அவ்வ்வ்வ்வ்வ்வ்..இப்புடியுமா கொல பண்ணுவீங்க மீல் மேக்கரை?!;)

    /வாழ்க வளமுடன்/நன்றி!;)
    ~~
    ஆசியாக்கா,அது அப்படியே கூப்ட்டு பழகிடுச்சு! :) மீல்மேக்கர் செய்துபாருங்க,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    பாயிஸா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    ஸாதிகாக்கா,பாயின்ட் நோட்டட்!:)
    /மீல் மேக்கரைப்பார்க்கும் பொழுதெல்லாம் ஸாதிகா அக்காவை மறக்க மாட்டீர்கள்./சேப்பங்கிழங்கு பார்க்கும்போதெல்லாம் உங்க ஞாபகம் வரும்,அதோட மீல் மேக்கரையும் சேர்த்துக்கறேன். :) நன்றி ஸாதிகாக்கா!
    ~~
    ஏஞ்சல் அக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    அப்பளத்தோட சாப்பிட்டு பாருங்க.நல்லா இருக்கும்!:)
    ~~
    /சோயா உருண்டைகள் பல வடிவங்களில் கிடைக்குதே மகி./ஆஹா...எனக்குத் தெரியாதே அதிரா! இந்த குட்டி சோயாவே இப்பதான் தெரிந்திருக்கு! ரவை போலவெல்லாம் கூட இருக்கா? ம்ம்..இங்கே அதெல்லாம் கிடைக்கறதில்லையே!

    சோயாவை எண்ணெயில் பொரிக்கமாட்டேன்,மசாலாவில் ஊறவிட்டு சமைத்துதான் பழக்கம், எண்ணெய் நிறைய குடிச்சுடாதா?? நீங்க சொல்லும்போதே சூப்பரா இருக்கும்போலதான் தெரியுது..செய்து பார்க்கிறேன்.
    நன்றி அதிரா!
    ~~
    /poos what happened to your sharp eye sight .ROFL:))).:)))./ :)))))
    ~~
    வானதி.நீங்க சொல்லும் தகவல்களும் எனக்குப் புதிது. இங்கே அந்த பெரிய மீல்மேக்கர் மட்டும்தான் கிடைக்குது. எங்க வீட்டில இது ரொம்ப பிடிக்கும்! :)
    கருத்துக்கு நன்றி வானதி!
    ~~
    ஷைலஜா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    காமாட்சிம்மா,செய்துபாருங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா!
    ~~
    பது,நன்றிங்க!
    ~~
    தனபாலன்,மீல் மேக்கர் செய்தாங்களா..சாப்டீங்களா?வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails